
புதுக்கோட்டை
ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நெடுவாசலில் 47-வது நாளாக மக்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் போராடி வருகின்றனர். மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்த்து திட்டத்தை ரத்து
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ளது நெடுவாசல்.
இந்த நெடுவாசல் உள்ளிட்ட நாட்டின் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்து நடந்த முதல்கட்ட போராட்டத்தின்போது, “மக்கள் விரும்பாத திட்டம் செயல்படுத்தப்படாது” என்று ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிய போராட்டக்காரர்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் பேசி திரும்ப பெற வைத்தனர்.
போராட்டம் திரும்ப பெறப்பட்ட அடுத்தநாளே ஐட்ரோகார்பனுக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு.
மத்திய அரசால் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது என்றும், உங்களது பேச்சைக் கேட்டு போராட்டத்தை கைவிட்டது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கினர் நெடுவாசல் மக்கள்.
அந்தப் போராட்டம் கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது. இந்தமுறை விழித்துக் கொண்ட மக்கள் ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை அழுத்தம் திருத்தமாக முழங்கி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர் இந்த இலட்சியப் போராட்டக்காரர்கள்.
இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 47-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் ஐட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் ஆலங்குடி தொகுதி மெய்யநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார்.