தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டி தீர்மானம்...

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 08:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டி தீர்மானம்...

சுருக்கம்

The resolution to fasten Tanjore - Nagapattinam highway project

திருவாரூர்

தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவபுண்ணியம் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், "தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு இருவழி சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பழைய சாலை செப்பனிடாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் ஏற்படும் விபத்துக்களில் உயிரிழப்பும் நடைபெறுகிறது.

எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அடுத்த மாதம் 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மன்னார்குடியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் எம்.செல்வராசு, வை.செல்வராஜ், சந்திரசேகரஆசாத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன்,

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் முருகேசு, மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை அருள்ராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

ஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..