ஸ்ரீ ரெட்டி சொன்ன விஷயம் யாருக்கு புரிஞ்சுதோ இல்லையோ! இவங்களுக்கு கண்டிப்பா புரிஞ்சிருக்கும்...

First Published Jul 23, 2018, 1:11 PM IST
Highlights
the reasons behind shri leaks


ஸ்ரீ ரெட்டி இந்த பெயர் தான் தற்போது கோலிவுட்டையும், டோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கி க்கொண்டிருக்கிறது. நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தி கொள்கின்றனர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதே ஸ்ரீஇ ரெட்டியின் குற்றச்சாட்டு. இதை தொடர்ந்து ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பல முன்னணி திரைத்துறை பிரபலங்களினை  கூறித்து அவர் வெளியிட்டிருக்கும் சில தகவல்கள் இப்போது திரையுகில் ஹாட் டாப்பிக் ஆகி இருக்கிறது.

ஸ்ரீ ரெட்டி மீடியாவின் வெளிச்சத்தை தன்மீது திருப்பி கொள்ளத்தான் இவ்வாறு செய்கிறார் என்பது சிலரின்கருத்து. அதற்கு ஏற்ப இப்போது மீடியாக்களில் அதிகம் அடிபடும் பெயராகவே இவரின் பெயர் இருக்கிறது.

சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி திரைத்துறையை சார்ந்த பலரும் பாலியல் ரீதியாக உபயோகித்து கொண்டு ஏமாற்றி விட்டனர் என இவர் கூறிவருகின்றார். அதனை விமர்சிக்கும் பலரும் அவ்வாறு உன்னை படுக்கைக்கு அழைத்த போது அவர்களுடம் கோபப்பட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் நீ உன் தேவைக்காக எல்லாம் செய்து விட்டு இப்போது ஏமாந்துவிட்டேன் என ஒப்பாரி வைக்கிறாய். என ஸ்ரீ ரெட்டியை சரமாரியாக தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

இந்த விஷயத்தில் ஸ்ரீ ரெடியின் சுயநலம் என்பதை ஓரம் கட்டி விட்டு யோசித்து பார்த்தால் இந்த விவகாரத்தின் இன்னொரு முகம் நமக்கு புரியும். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் என்றால் பிடிக்காத பெண்களே கிடையாது. அவர் மீது காதல் கொண்ட பெண்கள் ஏராளம் இன்றும் கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆர் புகழ்பாடும் பாட்டிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே போல தான் ரஜினி கமல் போன்ற நடிகர்களுக்கும் ஒரு காலத்தில் எராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். ஒரு நாள் வாழ்ந்தாலும் அவரோடு தான் என கூறும் ரசிகைகளும் உண்டு. அஜீத், விஜய், சூர்யா போன்றோர் மீதும் வெறித்தனமான காதல் கொண்டிருக்கும் ரசிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சினிமா மீதும் சினிமாக்காரர்கள் மீதுமான சாதாரண மக்களின் பிரம்மிப்பு இன்றளவும் குறையாமல் தான் இருக்கிறது. ஏதோ படிப்பறிவில்லாத கிராமத்து பெண்கள் தான் இப்படி ஒரு பிம்பத்துடன் வாழ்கிறார்கள் என்பதில்லை. நன்கு படித்து நாகரீகமாய் திரியும் பெண்களும் இந்த வகையில் உண்டு. மீடியா மீதான போதை என்பது இன்றும் மக்கள் மத்தியில் அப்படியே தான் இருக்கிறது.

என்ன அதன் பரிணாமங்கள் மாறி  இருக்கலாம் ஆனால் பிம்பம் அது மாறவில்லை. எளிதில் பணமும் புகழும் அடைய மீடியாவும் அரசியலும் தான் சிறந்த வழி என்னு எண்ணம் கொண்ட மக்கள், இன்னும் இங்கு இருக்கிறார்கள். அதற்காக எதையும் செய்யவும் சிலர் தயங்குவதில்லை. இது சரியா தவறா என கேட்டால் அதற்கு இன்னொரு கட்டுரை தான் எழுதவேண்டும்.

சரி அதற்கும் ஸ்ரீ ரெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், பதில் இது தான். இது போன்று ஊடகங்கள் மீது இருக்கும் மோகத்தால் எதையும் செய்து தன் முகத்தினையும் இந்த பிரம்மாண்ட திரையில் காண வேண்டும் என துடிக்கும் சில ஆர்வக்கோளாறுகளுக்கு “ எதையும் செய்தால் எல்லாம் கிடைக்கும் என்று இல்லை. நீங்களும் என் போல ஏமாற்றப்படுவீர்கள் என்பது ஸ்ரீ ரெட்டியே கூறி இருக்கும் பதில்”. சொன்னது யாராக இருந்தால் என்ன. சொன்ன விஷயம் சரி தானே!

குறைந்த பட்சம் மீடியா மீதான அந்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் உடைந்திட, இந்த சம்பவம் ஒரு சின்ன கல் அவ்வளவு தான். இது ஒரு கிசு கிசு தானே இதற்கெதற்கு இந்த விளக்கம் என சிலர் யோசிக்கலாம்… எல்லா பெரிய பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டது என்னவோ சின்ன கிசு கிசு தான். இந்த கிசு கிசுக்கு பின்னால் ஒரு பெரிய பிரச்சனையும் கூட இருக்கலாம் அல்லது வரலாம்….

click me!