
வேலூர்
ரேசன் கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடையில் உணவுப் பொருள்களின் இருப்பு, கடை திறக்கும், மூடும் நேரம், உணவு இடைவேளை உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்று உணவுத் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் உத்தரவிட்டார்.
டெல்லி அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்கள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு உணவுத் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், கோதுமை, அரிசி, சக்கரை போன்ற வகைப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கல் குறித்து அமைச்சர் மீளாய்வு செய்தார். அப்போது, நியாய விலைக் கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட்டு, மூடப்படுவதை உறுதிப்படுத்த உதவி ஆணையர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதேபோன்று, குடும்ப அட்டைப் பயனாளிகள் தங்களுக்குரிய ரேசன் ஒதுக்கீட்டை உரிய நேரத்தில் பெறுகிறார்களா? என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
நியாய விலைக் கடைகளின் உரிமையாளர்கள் தங்களது கடையின் உரிமப் பெயர், உணவுப் பொருள்களின் இருப்பு, கடை திறக்கும், மூடும் நேரம், உணவு இடைவேளை உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தகவல் பலகையில் காட்சிப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து உத்தரவுகளையும் கேட்ட பின்பு அவற்றை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கபடும் என உணவுத் துறையின் உதவி ஆணையர்கள் உறுதியளித்தனர்.