
அருப்புக்கோட்டை அருகே அதிவேகமாக வந்த கார் புளிய மரத்தில் மோதியதில் காரில் வந்த திருச்சுழி டி.எஸ்.பி. வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பணி காரணமாக தனது காரில் விருதுநகர் சென்றுவிட்டு அருப்புக்கோட்டை திரும்பியுள்ளார்.
அப்போது விருதுநகர் பலவநத்தம் கிராமத்தின் அருகே வெற்றிவேல் வேகமாக ஓட்டிவந்த கார் திடீரென புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் டி.எஸ்.பி. வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்த அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் வெற்றிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பு வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.