சேலம் அருகே போலி மருத்துவர் கைது - போலிசார் அதிரடி...

 
Published : Jul 31, 2017, 06:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
சேலம் அருகே போலி மருத்துவர் கைது - போலிசார் அதிரடி...

சுருக்கம்

The police have arrested a police officer in West Bengal near Omalur in Salem district.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த போலி மருத்துவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக போலி மருத்துவர்கள் இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதை அடுத்து தாரமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான குழுவினர் ஓமலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பாரக்கல்லூர் சாலையில் உள்ள மருத்துவ கிளினிக்கில் மருத்துவ குழு ஆய்வு செய்தனர்.

அப்போது, அதன் மருத்துவரான மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராணாஜித் பிஸ்வாஸ் என்பவர் 12ஆம் வகுப்பு மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த போலி மருத்துவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!