வரதட்சனை கொடுமையால் பெண் அடித்து கொலை...!!! - மருத்துவர் குடும்பத்துடன் கைது...

 
Published : Jul 19, 2017, 06:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
வரதட்சனை கொடுமையால் பெண் அடித்து கொலை...!!! - மருத்துவர் குடும்பத்துடன் கைது...

சுருக்கம்

The police arrested the doctor with the family

மன்னார்குடியில் வரதட்சனை கேட்டு மனைவியை அடித்து கொன்ற மருத்துவரை குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இளஞ்சேரன். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது 100 சவரன் நகையும், 10 லட்சம் ரூபாய் பணமும், அரைகிலோ வெள்ளி பொருட்களும், மற்றும் ஏராளமான வீட்டு உபயோக பொருட்களும் இளஞ்சேரனுக்கு வரதட்சனையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், இளஞ்சேரன் மற்றும் பெற்றோர் கூடுதல் வரதட்சனை கேட்டு திவ்யாவை தினமும் அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இளஞ்சேரன் மருத்துவமனைக்கும், அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கும் சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த திவ்யா மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறி மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளனர்.

ஆனால் திவ்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வரதட்சனை கேட்டு இளஞ்சேரனும், அவரது பெற்றோரும் திவ்யாவை அடித்து துண்புறுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!