
சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் ஏராளமான செவிலியர்கள் தற்காலிகமாக வேலை பார்த்து வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து தரப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் 2 ஆண்டுக்கு முன்பு அரசு உறுதி அளித்தபடி தங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை என கோரி செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரிவோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணியில் சேர்ந்த பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் 2010ல் 30% ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 12% ஆக குறைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.