
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது - சென்னை வானிலை மையம்
கடந்த ஒரு மாத காலமாகவே தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நல்ல மழை கிடைத்தது.இதனை தொடர்ந்து தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாகவே பரவலான மழை பெய்து வருகிறது
குறிப்பாக சென்னையை பொறுத்தவரை,இரவு நேரங்களில் மட்டும் அதிக மழை பெய்து வந்தது.இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தன.
இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களில் படிபடியாக மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
அதற்குள் தற்போது மேலும் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு கடந்த ஐந்து நாட்களாகவே விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது
சென்னையில் இடைவேளைவிட்டு மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் பின்னர் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது