மோடி கேட்டுட்டாரு....  ஓகே சொல்லுவாரா கருணாநிதி...?

 
Published : Nov 06, 2017, 03:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
மோடி கேட்டுட்டாரு....  ஓகே சொல்லுவாரா கருணாநிதி...?

சுருக்கம்

will karunanidhi say ok to modi

மோடி கேட்டுட்டாரு....  ஓகே சொல்லுவாரா கருணாநிதி...?

திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க அவரது கோபாலபுர இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வெகு விமரிசையாக வரவேற்பு கொடுக்கபட்டது.

தினத்தந்தியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா, சென்னை பல்கலை கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது .

இதில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை 1௦ மணிக்கு சென்னை விமான  நிலையம் வந்தார்.

பின்னர் அங்கிருந்து விழாவிற்கு வந்து சிறப்புரை ஆற்றிய மோடி,அங்கிருந்து கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து விட்டு,பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்ற மோடி, தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.

மோடி கருணாநிதியிடம் கூறியது என்ன தெரியுமா ?

கருணாநிதியை டெல்லி வந்து தனது வீட்டில் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் மோடி.இதற்கு கருணாநிதியும் புன்னகையை பதிலாக கொடுத்துள்ளார்.கருணாநிதிக்கு மேலிடத்திலிருந்து அழைப்பு  வந்துவிட்டது. ஆனால் அவர் டெல்லி சென்று ஓய்வு  எடுப்பாரா என்ன?....அரசியலில் இதெல்லாம்  சகஜமப்பா....  

மோடி கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்துச் சென்றதும், கருணாநிதி நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே வந்து தொண்டர்களை நோக்கி கை அசைத்தார். இதனால் அங்கு கூடிய தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது

மோடி கருணாநிதி சந்திப்பு தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மத்திய அரசை எதிர்த்து  குரல் கொடுத்து வந்த ஸ்டாலின் இன்று மோடியை புன்னகையோடு,பெரும் ஆரவாரத்தோடு  கோபாலபுர இல்லத்திற்கு வரவேற்றார்.

இந்த சந்திப்பை அடுத்து  திமுக உடன் பாஜாக கூட்டணி வைத்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு  கிளம்பியுள்ளது

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு