விவசாயிகளின் தெய்வமாக விளங்கும் பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே புதிய சட்டம் - பொன்னார் சொல்லும் நியாயம்…

First Published May 27, 2017, 2:17 PM IST
Highlights
The new law is to prevent the killing of cows that are the good


நாட்டின் பாராம்பரியத்தில் பசுக்களை விவசாயிகள் உற்ற தோழனாகவும், தெய்வமாகவும் கருதுவதால் அதனை கொல்வதற்கு விதிக்கப்பட்ட சட்டம் சரியானதுதான் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நேற்று பிதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், விலங்குகளை பாதுகாக்கவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுவாக இந்திய பாரம்பரியத்தில் பசுக்களை விவசாயிகள் உற்ற தோழனாவும், தெய்வமாகவும் மதித்து வந்துள்ளனர்.. ஆனால் காலப்போக்கில் மாடுகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அடி மாட்டு விலைக்கு விற்பளை செய்து வந்துள்ளதாக பொன்னார் குறிப்பிட்டார்.

எனவேதான் மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக பொன்னார் கூறினர்.

விவசாயிகளின் வருவாயைப் பெருக்க பிரதமர் நரேந்திர மோடி பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

click me!