விடாமல் துரத்தும் மாநகராட்சி அதிகாரிகள் - பிரபல சக்திகைலாஷ் கல்லூரிக்கு ரூ. 10 லட்சம் அபராதம்..!

First Published Oct 25, 2017, 4:01 PM IST
Highlights
The municipal authorities have ordered a penalty of Rs 10 lakh for the Kalahan Womens College Salem Shankar claiming that the water was being drenched in the dengue mosquito.


டெங்கு கொசு வளரும் வகையில் தண்ணீர் தேக்கியதாக கூறி சேலம் சக்தி கலாஷ் மகளிர் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தமிழகத்தில் டெங்குவால் பலர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  உயிரிழந்து வருகின்றனர். 

மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிக பேர் உயிரிழந்து வருகின்றனர். 

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

நாட்டிலேயே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தமிழகம்தான். அதில் சேலத்தில் சோல்லவே தேவை இல்லை. அந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

இதையடுத்து டெங்குவை பரப்பும் வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளாத வீடுகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதைதொடர்ந்து பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 

இந்நிலையில், சேலத்தில் உள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சக்திகைலாஷ் மகளிர் கல்லூரிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. டெங்கு கொசு வளரும் வகையில் தண்ணீர் தேக்கியத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  

மேலும் கலரம்பட்டியில் உள்ள புதுப்பிக்கும் பணி நடைபெற்று வரும் 3 தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

click me!