விடாமல் துரத்தும் டெங்கு - அஞ்சலக ஊழியர் ஒருவர் பலி...

First Published Oct 25, 2017, 3:35 PM IST
Highlights
An angry employee who was suffering from dengue in the hospital near Chidambaram died of the treatment.


சிதம்பரம் அருகே டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஞ்சலக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. 

தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை தொடரந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், சிதம்பரம் அருகே பு.ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் ராஜேஷ்வரி. இவர் புவனகிரி அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். 

இதைதொடர்ந்து அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ்வரி இன்று உயிரிழந்தார். 

click me!