Tamilnadu Rains : தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை மையம் புது தகவல் !

Published : Jan 24, 2022, 12:34 PM IST
Tamilnadu Rains : தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்..? வானிலை மையம் புது தகவல் !

சுருக்கம்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு எந்தெந்த இடங்களில் மழை பெய்யும்  என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இரவு முதல் காலை வரை பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேகக் கூட்டங்களின் திரட்சி குறைவாக உள்ளதாலும் வறண்ட வானிலை நீடிப்பதாலும் குளிர் காலத்தில் கூடுதல் பனிப்பொழிவு பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு இருக்கும்.  ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வட உள்மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இரவு இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!