
ப்ளூவேல் கேம் விளையாட்டை தடைசெய்ய கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து செப்.4 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
ப்ளூவேல் கேம் என்ற தற்கொலை செய்து கொள்ளும் விளையாட்டுதான் தற்போது உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது.
இந்தியாவில் மும்பை, கேரளா போன்ற மாநிலங்களில் பரவி வந்த இந்த விளையாட்டு தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது.
இதற்கு மதுரை திருமங்கலத்தில் முதல் முதலாக கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மாணவரின் வட்டாரங்களில் 75 பேர் இந்த விளையாட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை தொடர்ந்து புதுச்சேரியிலும் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விளையாட்டில் இருந்து மாணவர்களை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ப்ளூவேல் கேம் விளையாட்டை தடைசெய்ய கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதைதொடர்ந்து இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து செப்டம்பர் 4 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.