திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு, லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ பிடித்துள்ளது. நொடி பொழுதில் பரவிய தீ, மளமளவென எரிய தொடங்கியது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் கார் ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்துமதி, நேற்றிரவு 7 மணியளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் போட்டு விட்டு கட்டில் மெத்தையில் வைத்துள்ளார்.
மேலும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள்.. தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட் ஆஃப் குறித்து வெளியான முக்கிய தகவல்
இந்நிலையில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு, லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ பிடித்துள்ளது. நொடி பொழுதில் பரவிய தீ, மளமளவென எரிய தொடங்கியது. இதனால் பதறி அடித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் இந்துமதி. பின்பு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் வீடு முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தால், அணைக்க முடியவில்லை.
மேலும் படிக்க:கவனத்திற்கு !! 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500.. இலக்கிய திறனறிவு தேர்வு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பிர்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமாயின. லேப்டாப் சார்ஜ் போடும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் , அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.