விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய பல்பீர் சிங்..! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபரப்பு அறிக்கை

Published : Apr 05, 2023, 09:41 AM IST
விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய பல்பீர் சிங்..! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பரபரப்பு அறிக்கை

சுருக்கம்

விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் ஆதாரங்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் சுயநலமான செய்திகள் வெளியிடப்படுவதாகவும்,  விசாரணைக்கு பாதிப்புக்கு ஏற்படாத வகையில் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

விசாரணை கைதிகளில் பல் பிடுங்கிய விவகாரம்

அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்தவர்  பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக புகார் எழுந்தது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் நெல்லை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பொங்கலுக்கு ராஜஸ்தானில் விடுமுறை இல்லை.! மார்வாடிகள் கொண்டாட்டத்திற்காக தமிழர்கள் இறைச்சி சாப்பிட தடையா-சீமான்

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

அம்பை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பெருமாள் ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் அம்பை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனகுமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பரவேஷ் குமார் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பாக அந்த சங்கத்தின் தலைவரும் டிஜபிபியுமான அபாஸ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

ஐபிஎஸ் அதிகாரிகள் அறிக்கை

பல்வீர் சிங் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் மாநில மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையை துவங்கி உள்ளது.  இந்நிலையில்  ஆதாரங்கள், சாட்சிகள் என்ற அடிப்படையில் சமூக ஊடகங்களில் சுயநலமான செய்திகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய செயல்கள் விசாரணையை பாதிக்கலாம். அதோடு இந்த விஷயத்தில் பாராபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால் விசாரணைக்கு பாதிப்புக்கு ஏற்படாத வகையில் ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என  அபாஸ் குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்களா.?மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கும்!-எச்சரிக்கும் வேல்முருகன்

PREV
click me!

Recommended Stories

திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு! நடைதிறப்பு, பூஜை கால நேரங்களில் மாற்றம்!
மா.செ.களை தூக்கி அடிக்கும் விஜய்..? நாளை அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டும் தவெக..