வருமான வரித்துறை மீண்டும் சம்மன் - விஜயபாஸ்கருக்கு ஆரம்பித்தது தலைவலி...!!!

First Published Jul 20, 2017, 10:27 PM IST
Highlights
The income tax department has sent Health Minister Vijayabaskar to appear before the court tomorrow on the Income Tax Department.


வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நாளை காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் ஆர்.கே.நகரில் பணபட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களும் அடங்கும்.

இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா, அவரின் தந்தை ஆகியொரிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது.

மேலும் விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதிலும் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாளை காலை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விஜயபாஸ்கர் தந்தையின் கல்குவாரியில் சிக்கிய ஆதாரங்கள் குறித்து விசாரணை நட்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!