
போரூர் சிறுமி ஹாசினி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான தர்ஷன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் நிகிதா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 7 வயதில் ஹாசினி என்ற மகள் இருந்தார்.
கடந்த 5-ஆம் தேதி வீட்டுக்கு வெளியே தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.
இதையடுத்து பாபு போலீசாரிடம் பாபு புகார் அளித்தார். இதை தொடர்ந்து குடியிருப்பில் விசாரணை நடத்திய போது ஜஸ்வந்த் தர்ஷன் என்ற 22 வயது இளைஞர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் உடலை ஒரு பையினுள் வைத்து, தாம்பரம் புறவழிச் சாலையோரம் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தர்ஷன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் தந்தை மேல் முறையீடு செய்தார்.
இதற்காக போலீசார் பதிலளிக்ககாததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது