The guard who saved him from falling off the train
சென்னையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி தண்டவாளத்தில் விழப்போன பெண்ணை ரயில்வே போலீஸார் காப்பாற்றினர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்றிக்கொண்டிருந்த ஆழப்புழ விரைவு ரயில் புறப்பட்ட போது மேடவாக்கத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் ஒருவர் பிடிக்க முயன்றார். அவர் ரயிலில் ஏறிய போது கால் தவறி தண்டவாளத்தில் விழ போனார். அவரை ரயில்வே காவல் படையின் தலைமை காவலர் பாண்டியராஜன் காப்பற்றினார். சமயோசிதமாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய அவருக்கு ரயில்வே காவல்துறையின் உயரதிகாரிகள் மட்டுமின்றி சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.