அமலாபாலுக்கு இது தேவையா...! - அதிரடி உத்தரவு போட்ட ஆளுநர்...!

 
Published : Oct 30, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
அமலாபாலுக்கு இது தேவையா...! - அதிரடி உத்தரவு போட்ட ஆளுநர்...!

சுருக்கம்

The Governor of puducherry has ordered the action to be taken up immediately on the issue of tax evasion.

நடிகை அமலாபால் புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்து வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை அமலா பால் தனியார் நிறுவனத்தில் இருந்து பென்ஸ் S- கிளாஸ் வகை கார் ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

ஆனால் அந்த காரை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. 

கேரளாவின் கொச்சி நகரில் நிரந்தர முகவரி கொண்டுள்ள அமலா பால், புதுச்சேரியில் நிரந்தர முகவரி இருப்பதாக கூறி காரை பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி அமலாபால் கார் விவகாரம் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக்கு செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 

மற்ற மாநிலத்தவர்கள் புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!