ரம்ஜான் பண்டிகையையொட்டி திங்கட்கிழமையும் விடுமுறையா? தமிழக அரசின் முடிவு என்ன?

Published : Apr 29, 2022, 09:27 AM ISTUpdated : Apr 29, 2022, 09:31 AM IST
ரம்ஜான் பண்டிகையையொட்டி திங்கட்கிழமையும் விடுமுறையா? தமிழக அரசின் முடிவு என்ன?

சுருக்கம்

ரம்ஜான் பண்டிகை வருகிற 3 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளநிலையில், இதற்கு முந்தைய தினமான திங்கட்கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை விடுமுறையா?

ரம்ஜான் பண்டிகை வருகிற மே மாதம் 3 ஆம் தேதி செவ்வாய் கிழமை கொண்டாடப்படவுள்ளது, இந்தநிலையில்  இதற்கு முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமை மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த தினமான திங்கட்கிழமை அரசு வேலை நாட்களாக உள்ளது. எனவே இடையில் உள்ள ஒரு நாளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மே 2 ஆம் தேதியான திங்கட்கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக  மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்து முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

முதலமைச்சருக்கு ஜவஹிருல்லா கடிதம்

அந்த கடிதத்தில், "தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதாக  ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு முடிவு என்ன?

எனவே இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. விடுமுறை விடுவது தொடர்பாக தமிழக முதலமைச்சரின் கருத்து கேட்டபிறகு இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல தீபாவளி  மற்றும் பொங்கல் பண்டிகையின் போது அரசு வேலை நாட்களாக இருந்த ஒரு நாளை விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து அதற்கு மாற்றாக மற்றொரு நாட்களில் வேலை நாட்களாக செயல்பட்டது. எனவே அது போன்று தமிழக அரசு முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி