
லெட்சுமிபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ்க்கு சொந்தமான ராட்சத கிணறு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில் ராட்சத கிணறு ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள ராட்சத கிணறு தான் எனவும், அது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமானது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தோட்டத்தை நோக்கி படையெடுத்து கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து மதுரை வந்த ஒபிஎஸ் லட்சுமிபுரத்தில் உள்ள கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சிடைந்தனர். இதைதொடர்ந்து தான் இலவசமாக தருகிறேன் என ஒபிஎஸ் கூரிய கிணறு மற்றும் நிலம் தனி நபரான சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளதும், கடந்த 12 ஆம் தேதி தான் இது விற்பனையாகியுள்ளது எனவும் தெரிய வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கமெட்டியில் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இதைதொடர்ந்து லட்சுமிபுரத்தில் உள்ள ஒபிஎஸ்ஸின் கிணற்றை பெறும் வரை நூதன முறையில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று போராட்டம் தொடங்கியது. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதில் லஷ்மிபுர மக்களிடத்தில் சர்ச்சைக்குறிய ஒபிஎஸ் கிணறு ஒப்படைக்கப்பட்டது.