சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்.. இந்து சமய அறநிலையத்துறை எடுத்த அதிரடி முடிவு ! பிரச்னை ஓயுமா ?

By Raghupati RFirst Published Jun 12, 2022, 10:46 AM IST
Highlights

Chidambaram : கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலின் வரவு-செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு பொது தீட்சிதர்கள் சரியான ஒத்துழைப்பு வழங்காததால் திட்டமிட்டப்படி ஆய்வு நடைபெறவில்லை என இந்து சமய அறநிலையத் துறை ஆய்வு குழு தெரிவித்தது. 

மேலும் இந்த ஆய்வு சம்மந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாகவும் அதன் பின் சட்டபடியான நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் ஆய்வுக்கு வந்த விசாரணை குழுவினர் தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வு குறித்தான அறிக்கையை ஆய்வு குழு நாளை அறநிலையத்துறை ஆணையரிடம் சமர்பிக்க இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

இந்நிலையில்,சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அக்கறை உள்ள நபர்கள் கருத்துக்கள்,ஆலோசனைகள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.அதன்படி, அறநிலையத்துறை அமைத்துள்ள குழுவிடம் ஜூன் 20,21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து கருத்துக்களை கூறலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,நேரிலோ அல்லது vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஜூன் 21 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : Sonu Sood : நான்கு கை, நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை.. நடிகர் சோனு சூட் செய்த நெகிழ்ச்சி செயல்.!

இதையும் படிங்க : தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13 தேதி திறக்கப்படுமா ? அதிகரிக்கும் கொரோனா.. தேதி மாறுமா ?

click me!