மருத்துவ கல்லூரி சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

First Published Apr 20, 2017, 6:11 PM IST
Highlights
the current position should continue In the case of medical college


மருத்துவ கல்லூரி சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர், முதலமைச்சர் என பலரும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் வெளிப்படைதன்மை இருக்க வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை தவிர்ப்பது பற்றி பிரதமர் முடிவெடுக்க வேண்டும்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.

தமிழகத்தின் நீட் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று தரவேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வில் 98 % மாணவர்கள் பாதிக்கபடுவார்கள்.

கிராம மக்களின் சமூக பொருளாதாரத்தை பாதுகாக்க நீட் தேர்வை தவிர்ப்பது அவசியம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

 

click me!