
தாய், மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாமோதரனுக்கு 15 நாள் சிறை தண்டனை அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பம்மல் அருகே கிருஷ்ணாநகர் ரங்கநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தாமோதரன். இவர் தொழிலதிபராக உள்ளார்.
இந்நிலையில் தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதைதொடர்ந்து தனது தாய், மனைவி, இரு குழந்தைகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விஷம் கொடுத்து அவர்கள் மயங்கியிருந்த நிலையில் 4 பேரின் கழுத்தை அறுத்து தாமோதரன் கொன்றுவிட்டார்.
பின்னர் தானும் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தார் மீட்டு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சேர்த்தனர்.
இதுகுறித்து பம்மல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், 4 பேரை கொலை செய்த குற்றத்திற்காக தாமோதரனுக்கு 15 நாள் சிறை தண்டனை அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.