ஏற்கனவே போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவி அஸ்வினி - திட்டமிட்டு பழிவாங்கிய கொடூரன் - அதிரும் பின்னணி...!

 
Published : Mar 09, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
ஏற்கனவே போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவி அஸ்வினி - திட்டமிட்டு பழிவாங்கிய கொடூரன் - அதிரும் பின்னணி...!

சுருக்கம்

The college student who had already complained was Ashwini

கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மாணவியை கொலை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் கொளையாளி குறித்து மாணவி ஏற்கனவே மதுரவாயல் போலீசில் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.  

மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி அஸ்வினி. இவர் கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார். 

அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார். 

இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 

இந்நிலையில், முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஸ்வினி மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் கொலையாளி பெயர் அழகேசன் எனவும் அவரும் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும் அழகேசன் தொந்தரவால் அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உறவினர்கள் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்ததாக தெரிகிறது. 

அழகேசன் குறித்து ஏற்கனவே அஸ்வினி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னை அடிக்கடி தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அழகேசன் திட்டமிட்டு அஸ்வினியின் கல்லூரி அருகே வைத்து அவரை கழுத்தற்த்து கொலை செய்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

திமுக எம்.எல்.ஏ கார் மோதி ஒருவர் பலி..! ஒரத்தநாட்டில் பரபரப்பு..! என்ன நடந்தது?
அடேங்கப்பா... திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?