Tamilnadu Rains : தென் தமிழகத்தில் மழை.. வேறு எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு..?

By Raghupati RFirst Published Jan 16, 2022, 12:59 PM IST
Highlights

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,எனினும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதைப்போல,புதுச்சேரி,காரைக்கலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!