மக்களே உஷார்.. மார்ச் 1ல் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட வானிலை மையம் !!

Published : Feb 27, 2022, 05:52 AM IST
மக்களே உஷார்.. மார்ச் 1ல் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட வானிலை மையம் !!

சுருக்கம்

மார்ச் 1ல் வங்கக்கடலின் தெற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றும்.நாளையும்  தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்படுள்ளது. மார்ச் 1ல் வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தென் கடலோர மாவட்டங்கள், அண்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

மார்ச் 2ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

மார்ச் 1ல் வங்கக்கடலின் தென்மேற்கு, தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். 40-60 கிமீ சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்