போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கம்… - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி…

 
Published : Aug 16, 2017, 07:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
போத்ராவின் வங்கி கணக்குகள் முடக்கம்… - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி…

சுருக்கம்

The Central Criminal Police have deployed bank accounts of captive Bodhari and his two sons in the Kantavati complaint.

கந்துவட்டி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

அடுத்தடுத்து வரும் புகார்களை அடுத்து 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

பிரபல சினிமா பைனான்சியர் எஸ்.முகுந்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சதீஷ்குமார், பைனான்சியர் போத்ராவிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை போத்ராவிடம் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போத்ரா மற்றும் அவரது மகன்கள் இரண்டுபேரும் கந்து வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக சதீஷ்குமார் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார், போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அதைதொடர்ந்து, ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி என்பவர், போத்ராவின் மகன்கள் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில் தான் ரூ.1.40 கோடி, போத்ராவிடம் வாங்கியதாகவும், இதுவரை 2 கோடி ரூபாய் வரை செலுத்தி உள்ளதாகவும் கூறியிருந்தார். இதனால் அவர்கள் மீது 2 வது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகினர்.

இதைதொடர்ந்து நகை வியாபாரி ஹானந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் மீது 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் இந்த மூன்றாவது புகாரில் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கந்துவட்டி புகாரில் கைதான சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது 2 மகன்களின் வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.

அடுத்தடுத்து வரும் புகார்களை அடுத்து 6 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!