
நீட் தேர்வு குறித்த அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றபடுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ படிப்பு படிக்க மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு என்ற புதிய தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மாணவர்கள் தரப்பில் போராட்டம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் என பல தடுப்பு ஏற்படுகளை மேற்கொண்டனர். ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.
இந்த நீட் தேர்வின் போது பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கபட்டன. மேலும் பலத்த பரிசோதனைக்கு பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், அனைத்து மாநிலங்களிலும் ஒரே வினாத்தாளை கொண்டு தேர்வுமுறை நடத்தப்படவில்லை எனவும் மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய வினாத்தாளை கொண்டு நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று ஒரு சிலரும், வேறு சிலர் தமிழகத்தில் நீட் தீர்வே இருக்ககூடாது எனவும் தெரிவித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட 4 வாரம் தடை விதித்து மே 24 ல் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு குறித்த அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றபடுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.