சிறுவன் தலையில் பாய்ந்த தோட்டா.. சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களிடம் நேரில் விசாரணை.. தொடர் தீவிர சிகிச்சையில் சிறுவன்

Published : Dec 31, 2021, 09:46 PM IST
சிறுவன் தலையில் பாய்ந்த தோட்டா.. சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களிடம் நேரில் விசாரணை.. தொடர் தீவிர சிகிச்சையில் சிறுவன்

சுருக்கம்

புதுக்கோட்டை அருகே துப்பாக்கிச்சூடும் பயிற்சியின் போது, சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் குறித்து சிஐஎஸ்எப் வீரர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.  

நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் நேற்று சுமார் 34 பேர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்த 11 வயது சிறுவனின் தலைக்குள் பாய்ந்தது.

படுகாயம் அடைந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் புகழேந்திக்கு தலைக்குள் இருந்த குண்டு 4 மணிநேர அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. அதன்பிறகும், சுயநினைவின்றி புகழேந்தி இருந்து வருவதாலும், மூளை நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும், பிற உறுப்புகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில்,துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மீது கீரனூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை துணை காமாண்டர் நோயல், ஆய்வாளர் சிதம்பரம் ஆகியோரிடம் கோட்டாட்சியர் எம்.எஸ்.தண்டாயுதபாணி இன்று இரவு விசாரணை மேற்கொண்டார். அப்போது, பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் ரகம், குண்டுகள் மற்றும் குண்டுகள் கடந்து செல்லும் தூரம் குறித்து விளக்கினர். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் சிவசுப்பிரமணியன், பஸினாபீவி, அஸ்வினி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அருகே உள்ள மலைப்பகுதி, சிறுவன் பாதிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட இடங்களை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்