காதலியை கிண்டல் செய்த நபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சிறுவன்...!

 
Published : Jun 03, 2018, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
காதலியை கிண்டல் செய்த நபரை கழுத்தை அறுத்து கொலை செய்த சிறுவன்...!

சுருக்கம்

The boy who killed the friend for lover

சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடைய காதலியை தொடர்ந்து கிண்டல் செய்த நபரை குடிக்க  அழைத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு அருகே உள்ள மேட்டுகுளம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்கிற நபருக்கு 17 வயது சிறுவன்  ஒருவன் நண்பனாக இருந்துள்ளான். தொடர்ந்து கணேஷ் அந்த சிறுவன் காதலித்து வந்த பெண்ணை கிண்டல் செய்துள்ளார்.

இதனை அந்த பெண் சிறுவனிடம் தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த அவன், கணேஷை கொலை செய்ய திட்டமிட்டான். அதன்படி கணேஷை தன்னுடைய வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளான். 

இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது... முன்னாள் அமர்ந்திருந்த கணேஷை தன்னுடைய பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால், கழுத்தி அறுத்தும் இடுப்பு பகுதியில் குத்தியும் கொலைசெய்து, அதனை விபத்து போல் மாற்றி விட்டு அந்த இடத்தில் இருந்து சிறுவன் தப்பினான்.

பிரேத பரிசோதனையில், கணேஷ் கத்தியால் குத்தியும் கழுத்து அறுத்தும் கொலை செய்யப்பட்டது தெரிய வரவேற... போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் சிறுவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதனால் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!