மருத்துவமனை ஊழியர் அடித்ததால் மனமுடைந்த தற்காலிக ஊழியர் தற்கொலை...!

 
Published : May 02, 2018, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
மருத்துவமனை ஊழியர் அடித்ததால் மனமுடைந்த தற்காலிக ஊழியர் தற்கொலை...!

சுருக்கம்

The attack on the hospital temporary employee An employee who committed suicide without shame

அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர், தற்காலிக ஊழியர் ஒருவரை அடித்ததால், மனமுடைந்த அவர் எலிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு இறந்தவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஆர்த்தோ பிரிவில் பணிபுரிந்து வருபவர் ராஜகோபால், அதே பிரிவில், தற்காலிக ஊழியராக இருப்பவர் தீபன். இவர் பெரம்பலூர் ஆலம்பாடி சாலை பகுதியைச் சேர்ந்தவர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ராஜகோபால், தீபனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தீபன் வீட்டில் உள்ள எலி மருந்து சாப்பிட்டு உள்ளார்.

இதனை அடுத்து, தீபன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீபன் இறந்துபோனார்.

இந்த நிலையில், தீபன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் தீபனின் பிரேதத்தை சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பெரம்பலூர் - துறையூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கா? பனியின் தாக்கம் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட் இதோ!
வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!