புதிய விற்பனை முனைய கருவியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி…

 
Published : Nov 15, 2016, 02:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
புதிய விற்பனை முனைய கருவியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி…

சுருக்கம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை முனைய பயன்பாடு குறித்த பயிற்சி நடத்தப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மின்னணு விற்பனை முனைய பயன்பாடு குறித்த பயிற்சி காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் கஜலட்சுமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: “பொது விநியோக திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விற்பனையாளர்கள் புதிய விற்பனை முனைய கருவியை பயன்படுத்துவது குறித்து நன்கு பயிற்சி பெற்று மின்னணு விற்பனை முனைய கருவியின் மூலம் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் அட்டை எண் பதிவு செய்ய வேண்டும். சரியான செல்போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். கிடங்கில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வந்த உடன் மின்னணு விற்பனை முனைய கருவியில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும். ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பொருட்களை வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சௌரிராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பாஸ்கரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அருண்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதுகில் குத்திய திமுகவினர்..! முக்கிய விக்கட்டை தூக்கிய எடப்பாடி..! ஸ்டாலின் அதிர்ச்சி
புதிய பொறுப்பாளர்கள் நியமித்து அதிரடி.. தமிழ்நாடு அரசியலில் பாஜக அதிரடி மூவ்!