Normal 0 false false false EN-IN X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:8.0pt; mso-para-margin-left:0cm; line-height:107%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi; mso-fareast-language:EN-US;}திருபெரும்புதூர் திருபெரும்புதூரில் உதவி ஆணையர் தகாத வார்த்தைகளால் திட்டயதால் காவலர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.திருபெரும்புதூரை அடுத்த பட்டுநூல் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். காவல் சப்–இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கார்த்திக் (27). குன்றத்தூர் காவல் நிலையத்தில் காவலாளராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று போரூர் உதவி ஆணையர் பரந்தாமன் தகாத வார்த்தைகளால் கார்த்திக்கை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் கடந்த இரண்டு நாள்களாக வேலைக்கு செல்லவில்லை. வீட்டுக்கும் செல்லவில்லை.இந்த நிலையில் கார்த்திக் தனது நண்பர் ஒருவரது அறையில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டிருப்பது தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திருபெரும்புதூர் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.