
ஈரோடு
ஈரோட்டில் கடந்த பத்து நாள்களாக ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்துவரும் சிறுத்தப் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ளது புளியங்கோம்பை கிராமம். இங்கு இருப்பவர்கள் பெரும்பாலானோர் பட்டி வைத்து ஆடுகள் வளர்த்து வருகின்றனர். மேலும், வனப்பகுதி அருகே உள்ள தோட்டப் பகுதியில் ஆடுகளை மேய்ப்பர்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தைப் புலி இந்த கிராமத்துக்குள் புகுந்தது. இங்கு கடந்த பத்து நாள்களாக இந்த சிறுத்தைப் புலி அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வேலை முடித்து வருபவர்கள் பயந்து பயந்து வீட்டுக்கு வர கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த சிறுத்தைப் புலி, இரண்டு ஆடுகளை வேட்டையாடி அடித்துக் கொன்றுள்ளது. அதனால், இந்தச் சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.