
ஹெல்மெட் கட்டாய சட்டத்திற்கு எதிராக போராடிய 13 வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதித்தது.
அதேபோல், நீதிமன்ற நடைமுறையை பார்க்க அனுமதி மறுத்தற்காக போராடிய 3 பேருக்கு தடை, பெண் வழக்கறிஞர் சோதனையை வீடியோ எடுத்தற்காக போராடிய 9 பேருக்கு தடை என 25 வழக்கறிஞர்கள் பணி செய்ய வாழ்நாள் தடை விதித்து தமிழக, புதுச்சேரி, கர்நாடக பார் கவுன்சில்கள் அறிவித்தது.
போராட்டத்தால் 25 பேர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டதால், வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், கொந்தளிப்பும் இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஆர்பிஎப் பாதுகாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய தமிழக வழக்கறிஞர்கள் 25 பேருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்காலிக நீக்கம் செய்து அகில இந்திய பார்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.