தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது? வெளியானது தேர்வு அட்டவணை!!

By Narendran SFirst Published Jan 23, 2022, 6:06 PM IST
Highlights

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் அதேபோல் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி இரண்டு மற்றும் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,407 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 4,989 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்து மே மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி விரைவுவளர்கள் பணிக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு கலைக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரம் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

1,334 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தேர்வு வாரியம் கூறியது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 9 ஆயிரத்து 484 பணியிடங்களையும் நிரப்புவதற்காக முழு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியர் தேர்வு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

click me!