Tea shops open by CM:தேநீர் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..புது திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

Published : Dec 15, 2021, 04:42 PM IST
Tea shops open by CM:தேநீர் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..புது திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

சுருக்கம்

தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தர தொழில்துறை சார்பில் சர்வேத தேநீர் தினத்தையொட்டி 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  

தமிழ்நாடு சிறு, குறு , நடுத்தர தொழில்துறை சார்பில் சர்வேத தேநீர் தினத்தையொட்டி 20 நடமாடும் தேநீர் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் தரமான,கலப்படமற்ற தேநீர் பொதுமக்களுக்கு கிடைக்கபெறும் வகையிலும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் 10 கடைகளும், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 கடைகளும் , கோவையில் 4 கடைகளும் என முதற்கட்டமாக 20 நடுமாடும் தேநீர் கடைகள் முதலமைச்சர் இன்று கொடியசைத்து துவங்கிவைத்தார்.

இந்த நடமாடும் கடைகளில் தேநீரோடு சேர்த்து பிஸ்கட் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதனிடையே வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலக கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

நெல்லை டூ பழனி, பொள்ளாச்சிக்கு புது ரயில் வந்தாச்சு.. பயணிகள் குஷி! அட்டவணை என்ன?
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.. திருச்சியில் பிரதமர் மோடி சூளுரை..