
வேலூர் மாவட்டம் சிறுனைமல்லியைச் சேர்ந்த 25க்கும் அதிகமானோர் டாடா ஏஸ் எனப்படும் சரக்கு ஆட்டோவில் காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்றனர்.
அப்போது, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் இடதுபக்கம் சென்ற டாடா ஏஸ், தாமல் அருகே செல்லும் போது, பின்னால் வந்த பேருந்து மோதி நடு ரோட்டுக்கு தள்ளப்பட்டது. அப்போது, நடு ரோட்டில் அனாமத்தாக நின்று கொண்டிருந்த டாடா ஏஸ் மீது, பின்னால், வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 8 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 14 பேரில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த கோர விபத்து குறித்து பாலுச்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்