வெறிச்சோடி காணப்படும் "டாஸ்மாக் கடைகள்"....ஏக்கத்துடன் காத்திருக்கும் குடிமகன்கள்...

 
Published : Apr 09, 2017, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
வெறிச்சோடி காணப்படும்  "டாஸ்மாக் கடைகள்"....ஏக்கத்துடன்  காத்திருக்கும் குடிமகன்கள்...

சுருக்கம்

tasmac will be closed for 4 days

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அரசுக்கு அதிக  அளவு  இழப்பு  ஏற்பட்டுள்ளது என  தகவல் வெளியாகி உள்ளது.  

அதாவது  தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை ஆர். கே நகர்  இடைத்தேர்தலையொட்டி,  சென்னை  மற்றும் திருவள்ளூரில்   4   நாட்கள் டாஸ்மாக்   கடையை  மூட உத்திரவிடப்பட்டுள்ளது .

இதனையொட்டி  இன்று முதல்  தொடர்ந்து  3  நாட்களுக்கு  டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், மது பிரியர்கள் சற்று கவலை  அடைந்துள்ளனர் . அதே  வேளையில் விவரம் அறிந்தவர்கள் நேற்று  இரவே  மதுவை  வாங்கி  வைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவில்  மது வாங்க  அதிக  அளவில்  குடிமகன்கள்   மதுக்கடையில் வரிசையில்  நின்றுள்ளனர். 

இதன் காரணமாக , நேற்று மட்டும் ரூ.2 கோடி அதிகமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாக  தகவல் தெரிவிக்கின்றன . சென்னையில் உள்ள 250 டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் கிடைக்கிறது. அப்படி பார்த்தால் 4 நாட்களுக்கும்  சேர்த்து 32  கோடி  வருமானம்  இழப்பு  ஏற்படும்  என தெரிகிறது.

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!