இதோ டாஸ்மாக் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியாச்சு! 15 அம்ச கோரிக்கை முழக்கம்...

 
Published : Jun 13, 2018, 07:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இதோ டாஸ்மாக் ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியாச்சு! 15 அம்ச கோரிக்கை முழக்கம்...

சுருக்கம்

tasmac staff demonstration insists 15 points demand

 
திருவண்ணாமலை 

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் வெங்கடேசன், செல்வராசு, ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநிலச் செயலாளர் சௌந்தரராசன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், சீருடை, பணிப் பதிவேடு, சம்பள ரசீது போன்றவை வழங்கிட வேண்டும். 

டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்கு ஈட்டுறுதி திட்டத்தில் இணைத்திட வேண்டும். 

ஓய்வுபெறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சிறப்பு பண முடிப்பு வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?