
மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அம்மாவட்ட ஆட்சியாளர் திரு. வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் தேவர் ஜெயந்தி திருவிழா, மதுரை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்களின் பல்வேறு பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் வரும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை 4 நாட்கள் இயங்காது என மதுரை மாவட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.