
ஊரில் அவனவன் செல்லாத நோட்டுகளை வைத்து அல்லாடும் போது போர்க்கால அடிப்படையில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துகொண்டு மதுபானங்களை வழங்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென திடீரென்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாதாரண அன்றட சிலவுகளுக்கே ஆளாய் பறக்கும் நிலை. சிறுவணிகர்கள், சாதாரண தொழில் செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் , வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பொதுமக்கள் இப்படி துயரத்தில் ஆழ்ந்திருக்க யார் எப்படி போனால் என்ன நமக்கு காரியம் ஆகணும் என குடிமகன்கள் கிளம்பி உள்ளனர். குடிமகன்கள் என்றால் மதுகுடிப்போர் என்று இங்கு அர்த்தம் ஆகிறது.
மதுகுடிப்போர்களுக்கு தனியாக சங்கம் ஒன்று இயங்குகிறது. இவர்கள் புதுமையான ஒரு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதன்படி அனைத்த டாஸ்பார்க் பாஅர்களிலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பெற்றுகொண்டு மதுபானம் வழங்க வேண்டுமாம். அதுவும் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டுமாம்.
இதோ அவர்கள் அறிக்கை:
இன்று காலை 11 மணிக்கு முதல்வர் தனிப்பிரிவு, டாஸ்மாக் மேலாளரைசந்தித்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுகொண்டுஅரசு மதுபானங்களை கொடுத்திடவேண்டி போர்க்காலஅடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மனுகொடுக்கிறோம் இவன் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் . இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.