ஒஎன்ஜிசிக்கு எதிர்ப்பு – போர்கொடி தூக்கிய டெல்டா மாவட்ட மக்கள்…!!!

Asianet News Tamil  
Published : Jul 11, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
ஒஎன்ஜிசிக்கு எதிர்ப்பு – போர்கொடி தூக்கிய டெல்டா மாவட்ட மக்கள்…!!!

சுருக்கம்

tanjore district support for kathiramagal ONGC issues

கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறி  மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்,  கதிராமங்கலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறி  மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை, திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருபுவனம், பந்த நல்லூர், காகித பட்டறை தத்துவாஞ்சேரி, அணைக்கரை, நரசிங்கன் பேட்டை,திருவாலங்காடு, நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தை ரவுண்ட் கட்டப்போகும் மழை.! எந்தெந்த மாவட்டம்? சென்னையின் நிலவரம் என்ன?
பிறந்த நாளில் வாழ்த்து மழையில் நனைந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாட்டம்