போன், லேப்டாப்பை சார்ஜ் போட்டு வச்சுகோங்க… எச்சரிக்கை விடுக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!!

By Narendran SFirst Published Nov 10, 2021, 11:47 AM IST
Highlights

சென்னை , கடலூர், ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை மதியம் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

சென்னை , கடலூர், ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் நாளை மதியம் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அதிக கனமழை யெ்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்டசமாக நாகை மாவட்டம் திருப்பூண்டியில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் திருவாரூர். நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆழ்ந்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு முழுக்க மழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று இரவிற்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இதனால் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது டிவிட்டரில், மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் இதனால் கடலூர், சென்னை, ஸ்ரீஹரிகோட்டா பெல்ட்டில் நாளை மதியம் வரை தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். காரைக்கால் - நாகை பெல்டில் மேகங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகங்கள் தற்போது நகர்ந்து கடலூர் - சென்னை பெல்டிற்கு சென்றுவிட்டதாக கூறிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் தூரமாகவே இருக்கிறது என்றும் ஆனால் இது நகர தொடங்கிய பின் மேக கூட்டங்கள் கடலூர் - சென்னை - ஸ்ரீஹரிகோட்டா பெல்ட் பக்கம் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவர் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் விரைவில் மழை தொடங்கும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஒரு பகுதி மேகம் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இசிஆர், சிறுசேரி பகுதிகளில் முதலில் மழை தொடங்கும் என்றும் கூறிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அதன்பின் நகரின் மற்ற பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் முடிந்த அளவு வீட்டிற்கு சீக்கிரம் செல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது வெறும் விழிப்புணர்வு போஸ்ட்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ வானிலை மைய தகவலையும், அரசின் அறிவிப்புகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். இன்றும், நாளையும் உங்கள் போன், லேப்டாப் ஆகியற்றவை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறிய வெதர்மேன் பிரதீப் ஜான், காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாடு வடகடலோர மாவட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்றில் இருந்து நாளை மதியம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த அறிவுரையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!