அங்கன்வாடி பணிகள்… கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு… அரசின் அசத்தல் அறிவிப்பு!!

By Narendran SFirst Published Nov 10, 2021, 11:11 AM IST
Highlights

அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக தலைமை ஏற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு உள்ளது. தமிழக முதல்வராக பதவியேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். ஒவ்வொரு துறைக்கு ஏற்றார்போல திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சுகாதாரத்துறை,  இந்து சமய அறநிலையத் துறை , பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மீதான கவனம் கூடுதலாகவே உள்ளது. அது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு இல்லாமல் சமமாக அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இக்கட்டான காலத்தில் ஊரடங்குடன்  தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.  அதேபோல் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிரத்யேக ரேஷன் கார்டுகள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு அரசின் பல்வேறு நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை கிடைக்கிறது. அதனை தொடர்ந்து அங்கன்வாடி நேரடி நியமன பணியில் சட்ட திருத்தம் மேற்கொண்டு விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தற்போது அரசாணை வெளியாகி உள்ளது. அதன்படி அங்கன்‌வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்‌டுள்ளதுடன்‌ மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌ ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ மற்றும்‌ குழும இயக்குநர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌, அங்கன்வாடி ஊழியர்கள்‌ காலிப்பணியிடங்களில்‌, ஆதரவற்ற விதவைகள்‌, விதவைகள்‌ மற்றும்‌ கணவனால்‌ கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி அங்கன்‌வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்‌டுள்ளதுடன்‌ மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌ ஆணையிட்டுள்ளவாறு இனசுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டு முறையினை பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்‌, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்‌ பணிகள்‌, இயக்குநர்‌ மற்றும்‌ குழும இயக்குநர்‌ அவர்கள்‌ தனது கடிதத்தில்‌, அங்கன்வாடி ஊழியர்கள்‌ காலிப்பணியிடங்களில்‌, ஆதரவற்ற விதவைகள்‌, விதவைகள்‌ மற்றும்‌ கணவனால்‌ கைவிடப்பட்டோர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கன்வாடிப்‌ பணியாளர்‌, குறு அங்கன்வாடிப்‌ பணியாளர்‌ மற்றும்‌ அங்கன்வாடி உதவியாளர்‌ பணியிடங்களுக்கு தகுதிகள்‌ நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

click me!