
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிலிருந்து சில நிர்வாகிகள் வெளியேறி ஒரு புதிய அமைப்பை தொடங்க, சென்னை ஜிபி சாலையில் உள்ள சர்மினி ஓட்டலில் ஆலோசனை செய்தனர்.
தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் கலந்தாலோசித்து ஒரு புதிய அமைப்பை உருவாக்க முடிவு செய்தனர் . அதன் படி, "தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு" என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ளனர்
இந்த பேரவையின் ஒருங்கிணைப்பாளராக சந்திர ஜெயராமன் உள்ளார். இவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் உள்ள சில நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பு இல்லாததாலும், வணிகர்களின் பிரச்சனைகளுக்கு எந்த சரியான தீர்வும் காணப் படாததாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்
இதன் காரணமாக உருவாகியுள்ள, இந்த தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு நன்முறையில் செயல்படும் எனவும் தெரிவித்தார்.