Tamilnadu rain : இரண்டு நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்… வானிலை மையம் வெளியிட்ட தகவல் !

Published : Jan 04, 2022, 02:04 PM ISTUpdated : Jan 04, 2022, 02:09 PM IST
Tamilnadu rain : இரண்டு நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும்… வானிலை மையம் வெளியிட்ட தகவல் !

சுருக்கம்

அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் 4. 5 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வ பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 6, 7-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 4, 5 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.  தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 

இம்மாதம் 3-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 10 செமீ, பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழைப் பதிவாகியுள்ளது. இன்று அதாவது 4-ம் தேதி குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். ஆகவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பணி ஆணை முதல் கழிவரை ஒப்பந்தம் வரை.. புகுந்து விளையாடிய KN நேரு.. மொத்த வசூல் ரூ.1020 கோடியாம்
கொங்கு மண்டலத்தில் ஸ்கெட்ச் போட்ட விஜய்.. பீதியில் திமுக, அதிமுக.. டிசம்பரில் சம்பவம் உறுதி.!